கொழும்புக்கு அப்பால் பாரிய கொள்கலன் கப்பல் MSC Daniela இல் தீ
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2017 (வியாழக்கிழமை)
சிங்கப்பூரில் இருந்து சுயஸ் நோக்கி பயணித்திக் கொண்டிருந்த MSC Daniela என்னும் பாரிய கொள்கலன் கப்பல் ஒன்றில் நேற்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தெற்காக சுமார் 120 கடல் மைல்கள் தொலைவில் கப்பல் இருந்த வேளையிலேயே தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து கப்பல் மாலுமிகள் தீயை அணைக்க போராடியுள்ளனர். ஆனாலும் தீ மேலும் பரவியதைத் தொடர்ந்து கப்பல் கொழும்பு பக்கமாக திருப்பப்பட்டு, கப்பலில் இருந்து அபாய அறிவிப்பும் விடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்து கப்பல் கொழும்பில் இருந்து சுமார் 33 கடல் மைல்கள் அண்மித்த வேளை இலங்கை கரையோர காவற்படையினர் மற்றும் இலங்கை கடற்படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.