அமெரிக்காவின் Pennsylvania வில் புதைக்கப்படாமல் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டுவந்து சிறைக்கைதி ஒருவரின் உடல் சுமார் 128 வருடங்களின் பின்னர் Reading பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Philadelphia இன் reading பகுதியில் பிக்பொக்கெட் செய்து பிடிக்கப்பட்ட நபர் 1885 ஆம் சிறையில் இறந்தார். சிறையில் அடைக்கப்பட்ட போது தனது உண்மையான பெயரை கூறாமல் ஜேம்ஸ் மர்பி என பதிவு செய்திருந்தார். அவரது உடலை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.
இதையடுத்து அவரது உடலை எம்பாமிங்க் நுட்பங்களை பயன்படுத்தி மம்மியாக மாற்றி பாதுகாத்து வந்தனர்.
அவருக்கு Stoneman Willie என பெயரிடப்பட்டு கடந்த 128 வருடங்களாக Reading பகுதியில் உள்ள ஆமன் தேவாலயத்தில் போது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக Stoneman Willie ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் அவர் நியூயோர்க்கில் வசித்ததும் மதுவுக்கு அடிமையானவர் என்றும் கண்டு பிடித்தனர்.
அவரது தந்தை ஒரு பணக்காரத் தொழில் அதிபர் ஆவார். தான் திருட்டு வழக்கில் சிக்கியதால், தந்தை பெயரைக் கொடுக்க விரும்பாமல் போலிப் பெயரைப் பயன்படுத்தி உள்ளார் என்றும் ஆய்வாளர்கள் கூறி உள்ளார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.