பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை நடால்,ஷரபோவா கைப்பற்றினர்! படங்கள்,வீடியோ இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2014 (திங்கட்கிழமை)
நானே களிமண் தரையின் ராஜா என்று மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் ரஃபேல் நடால்.2014ம் ஆண்டிற்கான பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலமே மேற்கூறப்பட்ட கூற்றுக்கு மேலும் வலு சேர்த்துள்ளார் நடால்.
பிரெஞ்ச் ஓபன் கோப்பையுடன் தனக்கேயுரிய பாணியில் நடால்
பிரெஞ்ச் ஓபனின் இறுதி 15 வது நாளான இன்று ரோலாண்ட் காரோஸ் என்றழைக்கபடும் இச்சுற்று போட்டியின் பாராம்பரியத்தை போலவே ஆடவர் ஒற்றையாருக்கான இறுதிப்போட்டி இடம்பெற்றது.இதில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நடாலும்,உலகின் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவை சேர்ந்த நோவான் ஜோகோவிச்சும் மோதினர்.
ஆக்ரோஷமாக ஆரம்பித்த ஜோகோவிச்
தனது ஆயுதமானா forehand முறையிலான ஷொட்டில் திருப்பி நடால் தாக்குதல்
ஆட்டம் இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்தது.முதலாவது செட்டில் களிமண் தரை ராஜா நடால் 3-6 என்ற கணக்கில் ஜோகோவிச்சிடம் சரணடைந்தார் பின் சுதாகரித்து கொண்ட நடால் அடுத்தடுத்த செட்களை 7-5,6-2,6-4 என்ற கணக்கில் வென்று பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 9வது முறையாகவும் தனதாக்கி தானே ராஜா என்பதை நிரூபித்தார்.இவ்வாட்டம் 3 மணித்தியாலம் 31 நிமிடங்கள் நீடித்திருந்தது.தான் விளையாடிய எந்தவொரு கிரான்ஸ்லாம் இறுதிப்போட்டியிலும் முதல் செட்டை வென்றதன் பின் அப்போட்டிகளில் தோற்காத ஜோகோவிச்சின் வரலாற்றையும் நடால் இன்று மாற்றி எழுதினார்.
ஆட்டத்தை வென்ற தருணத்தில் நடால் செய்வதறியாது
முதல் நிலை,இரண்டாம் நிலை முறையே நடால்,ஜோகோவிச் உரியவர்களிடம்
இதேவேளை நேற்று நடைபெற்ற மகளீருக்கான ஒற்றையர் இறுதிப்போட்டியில் தற்போது உலகின் 7ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் ஷரபோவா, தரவரிசையில் 4ம் நிலை வகிக்கும் வளர்ந்து வரும் ரோமானிய வீராங்கனையான சிமோனா ஹாலிப்பை 6-4,6-7,6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
கோப்பையுடன் ரஷ்ய அழகுமங்கை ஷரபோவா
ஓடி முன்னேறிவரும் சிமோனா ஹலீப்
ஹாலிப்புக்கு இப்போட்டியே கிரான்ஸ்லாம் அந்தஸ்துள்ள முதலாவது இறுதி போட்டியாகும். அதேவேளை ஷரபோவா கடந்த 3 வருடத்தில் 3 முறையும் பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு வந்து 2 முறை பட்டத்தை கைப்பற்றி களிமண்தரையில் மகளீரில் நடாலுக்கு இணையான ராணி தானே என்று நிரூபித்துள்ளார்.இந்த பிரெஞ்ச் ஓபன் பட்டத்துடன் மொத்தம் இதுவரை 5 கிரான்ஸ்லாம் படங்களை ஷரபோவா வென்றுள்ளார்.நேற்று பரபரப்பாக நடந்த இப்போட்டி 2001ம் ஆண்டுக்கு பின் நடந்த முதலாவது 3 செட் கொண்ட இறுதிப்போட்டி ஆகும்.இத்தொடரின் தான் கலந்து கொண்ட எல்லா போட்டிகளை போலவும் தனது பிடி போட்டியில் இருந்து இளகிய தருணங்களில் தனது ஆக்ரோசத்தை வெளிப்படுத்தி வென்றது போல இப்போட்டியிலும் ஷரபோவா சாதித்தார்.
சிமோனா ஹாலீப்,மரியா ஷரபோவா முறையே இரண்டாமிடம்,முதலாமிட கோப்பைகளுடன்
பிரெஞ்சின் அடையாளம் ஈபிள் டவரில் கோப்பையுடன் ஷரபோவா
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.