தொண்டைமனாற்றிலிருந்து திருகோணமலைக்கு புதிய பஸ் சேவை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2016 (புதன்கிழமை)
பயணிகளின் நன்மை கருதி பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையால் நேற்று முன்தினம் 17 ஆம் திகதி முதல் தொண்டைமானாற்றிலிருந்து பருத்தித்துறை சென்று அங்கிருந்து திருகோணமலை மூதூர் வரை பஸ் சேவை இடம்பெறவுள்ளது.
காலை 09.30மணிக்கு தொண்டைமானாற்றிலிருந்து புறப்படும் பஸ் பருத்தித்துறையை சென்றடைந்து முற்பகல் 10.30 மணிக்கு பருத்தித்துறையிருந்து புறப்பட்டு வவுனியா ஊடாக திருகோணமலை சென்று மூதூர் வரை சேவை இடம்பெறவுள்ளது.
இதேபோல் மூதூரிலிருந்து காலை 07.00 மணிக்கு புறப்படும் பஸ் திருகோணமலையை வந்தடைந்து முற்பகல் 10.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து புறப்பட்டு பருத்தித்துறையை வந்தடையும்.
இதேவேளை இதுவரை முற்பகல் 11.00 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து வவுனியா செல்லும் நாளை 17ஆம் திகதி முற்பகல் 11. 30 மணிக்கு புறப்படும் என பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் க.கந்தசாமி அறிவித்துள்ளார். (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.