துபாயில் 70 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான இந்து கோயில் திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2022 (வெள்ளிக்கிழமை)
துபாயில் பிரம்மாண்டமான இந்து கோயில் கடந்த 5 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் அரபு கட்டிடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் சகிப்புத்தன்மை, அமைதி, நல்லிணக்கத்தை வலியு றுத்துவதாக அமைந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாய் நகருக்கு அருகே அமைந்துள்ளது துறைமுக நகரம் ஜெபல் அலி. மிகப்பெரிய வர்த்தக மையமாகவும் இது விளங்குகிறது. ஜெபல் அலி பகுதியில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்து கோயில் கட்டப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தக் கோயிலின் கட்டுமானப் பணி நிறைவடைந்ததை யடுத்து நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.
கோயில் திறப்பு நேற்று இந்த கோயிலின் திறப்பு விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் துபாயின் ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் கலந்துகொண்டு கோயிலை திறந்துவைத்தார். இந்த கோயில் திறப்பு விழாவில் இந்திய தூதர் சுஜாய சுதீர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அழகிய கட்டிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கோவில் கட்டுவதற்கான நிலம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. மிகவும் வித்தியாசமான அழகான கட்டிடக் கலையுடன் பிரம்மாண்டமாக இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. 80 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த இந்து கோயிலில் அனைத்து மதத்தினரும் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.
16 சாமி சிலைகள் இந்து மதத்தில் பல்வேறு சாமிகளை வழிபடும் மக்களும் இங்கு வந்து செல்லும் வகையில் சிவன், கிருஷ்ணர், மகாலட்சுமி, விநாயகர், பெருமாள், முருகன் சிலைகள் என மொத்த 16 சாமி சிலைகள் இங்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. 16 சிலைகளுக்கு தனித்தனியே இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
தாமரை இந்த கோயில் கட்டிடத்தில் மிகப்பெரிய தாமரை வடிவமைக்கப்பட்டு காண்போரை கவர்கிறது. இந்த கோயிலில் பக்தர்களுக்கான மிகப்பெரிய கூடம், திருமண அரங்கம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இங்குள்ள திருமண அரங்கங்களை பயன்படுத்த QR கோட் ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.