வல்வெட்டித்துறை நகராட்சி மண்ற நிர்வாக எல்லைக்குட்பட்ட முன்பள்ளிகளில், நேற்றயதினம் சத்துணவுத்திட்டம் உலக வங்கியின் நிதி அனுசரணையில் உள்ளூராட்சி மண்றங்களின் வலுப்படுத்தல் திட்டத்தின்கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நகரசபை எல்லைக்குள் இயங்கி வரும் ஒன்பது முன்பள்ளிகளில் பிரதேச செயலகத்தினால் ஏற்கனவே சத்துணவு வழங்கப்படும் ஐந்து முன்பள்ளிகளை தவிர்த்து மற்றைய முன்பள்ளிகளான பொலிகை விநாயகர் முன்பள்ளி, வல்வை விக்கினேஷ்வரா முன்பள்ளி, திருமகள் முன்பள்ளி மற்றும் கலைவாணி முன்பள்ளி என்பன இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட நிகழ்வானது வடமாகான பிரதம செயலர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரின் வழிகாட்டலின் கீழ் நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச பொதுச் சுகாதார அதிகாரிகளின் பங்களிப்புடன் மர நடுகை மற்றும் பெற்றோருக்கான ஊக்கப்படுத்தல் நிகழ்வுடன் சிறப்பாக நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.