மரண அறிவித்தல் - திரு. இரத்தினவடிவேல் சிவனருட்சோதி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2026 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - திரு. இரத்தினவடிவேல் சிவனருட்சோதி
தோற்றம்: 29/12/1958 மறைவு: 29/05/2026
வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் காந்தி வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினவடிவேல் சிவனருட்சோதி நேற்று (29/05/2026) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்தினவடிவேல் வள்ளியம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், கனகாம்பிகையின் அன்புக் கணவரும், சர்மிலனின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற சக்திவேல் மற்றும் சத்தியவாணி, தங்கவேல், மாணிக்கவாசகர், வபிஷ்டாதேவி, இரத்தினஜோதி, கலாவாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பிரேமகுமாரி, செந்திவேல் மற்றும் பவானி, ஜெயந்தி, மதிவண்ணன், யோகசாந்தி, உருத்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
லட்சுமிதேவி, நேசமலர், முருகவேல், கனகராணி, அமரர் நகுலேஸ், அமரர் பரமகுரு, மற்றும் சத்தியேஸ்வரி, சகுந்தலா தேவி, சித்திராதேவி, இன்பகுரு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (31/05/2026) ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மாலை 4 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.