அன்னார் இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சி குமரன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தேஸ்வரராஜா அவர்கள் 02.12.2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் அமரர் வினயகசுந்தரம் தங்கரத்தினம் அவர்களின் மூத்த மகனும்,
காலம் சென்ற தங்கவடிவேல் தெய்வானைஅம்மா அவர்களின் மூத்த மருமகனும்,
குமாரசாமி, காலஞ்சென்ற நடராஜ, காலஞ்சென்ற கமலரஞ்சிதம், காலஞ்சென்ற அருணாசலம், சந்திரகாந்தி, காலஞ்சென்ற ரங்கநாதன் ஆகியோரின் சகோதரரும், மற்றும், பேரன், பேத்தி, பூட்டப்பிள்ளைகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05.12.2017 செவ்வாய்க்கிழமை மதியம் 2.௦௦ மணியளவில் அன்னாரின் இறுதிக் கிரியைகள் இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.