வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட Dr.து.வீரகத்திப்பிள்ளை அவர்கள் 03/09/2019 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற துரையப்பா சிவகாமசுந்தரி தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்ற இராசதுரை சின்னக்கண்டு அவர்களின் மருமகனும், காலஞ்சென்ற வீ.தங்கலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னார் பிரேம்குமார், ஜெயகுமார், சுகுமார், லதா, சுரேஷ்குமார், ஜெகதீஸ்குமார், பிரதீப்குமார், ரமேஷ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும், பி.ராகினிதேவி, ஜெ.ரெபேக்கா, சு.நகுலேஸ்வரி, பத்மகுமார், சு. இந்துமதி, ஜெ.நிரஞ்சனா, பி.மாலதி, Dr.ஜெயந்தி ஆகியோரின் மாமனாரும் ஆவார். காலஞ்சென்ற இ.குணரத்தினம், இ.முருகதாஸ், இ.மோகன் ஆகியோரின் மைத்துனரும், ஜெயலட்சுமி முருகதாஸ் அவர்களின் சகோதரனும், அனித்தா, ஹரிஷ், லிதிய, அக் ஷயன், மதுஷி, ஷாரிக்கா, ஆகாஷ் ஆகியோரின் அன்புத் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மஹிந்த மலர்சாலையில் 04/09/2019 காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை வைக்கப்பட்டு, மறுநாள் 05/09/2019 அன்று 34/B , கிரகரி வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு நண்பகல் 1.00 மணிக்கு தகனக்கிரியைக்காக கல்கிசை பொது மயான இந்துப் பிரிவிற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.