மரண அறிவித்தல்
இரத்தினவடிவேல் தனபாலசிங்கம்
(ஓய்வுபெற்ற வருமானவரி திணைக்கள உத்தியோகத்தர்)
(முன்னாள் வல்வை நலன்புரிச்சங்க தலைவர் அவுஸ்திரேலியா)
தோற்றம் 07.06.1934 மறைவு 11.08.2020
பிலாவடி, தெணியம்பை, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், ஊரிக்காடு, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், சிட்னி, அவுஸ்திரேலியாவை தற்போதய வாழ்விடமாகவும் கொண்டிருந்த இரத்தினவடிவேல் தனபாலசிங்கம் அவர்கள் 11.08.2020 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற இரத்தினவடிவேல்-ஆனந்தவல்லியம்மா தம்பதிகளின் புதல்வனும்,
காலம்சென்ற நடராசா-யோகாம்பிகை தம்பதிகளின் மருமகனும்,
மனோன்மணியம்மாவின் அன்பு கனவரும்,
காலம்சென்ற திருமதி மாணிக்கரத்தினம்-ராஜரத்தினம் அவர்களின் தம்பியும்,
காலம்சென்ற ராஜரத்தினம், காலம்சென்ற கந்தசாமி, ஐயாத்துரை, மோனகுரு, திருமதி சீதாலட்சுமி-ராமச்சந்திரன், பழனிவேல், காலம்சென்ற சண்முகராசா, இந்திரகுமார் மற்றும் சக்திவேல், சுந்தரலிங்கம், உருத்திரகுமார், இராஐகுமார் (பொட்டு சங்கர்) ஆகியோரின் மைத்துனரும்,
ராஜ்குமார், திருமதி ஆனந்தரூபி நக்கீரன், இரத்தினவடிவேல் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருமதி சியாமளா-ராஜ்குமார், நக்கீரன், திருமதி நளினி-இரத்தினவடிவேல் ஆகியோரின் மாமனாரும்,
கவிவர்ணன், கவிபாரதி, தனா, காருண், கவிநிலா, திருமதி பிரதீபா-கவிவர்ணன் ஆகியோரின் அன்பு பேரனும்,
திவர்ணாவின் ஆசை பூட்டனும்,
திருமதி பாலரானி-சுந்தரகுமார், திருமதி ஆனந்தராணி-பாலேந்திரா, ரெட்ணராஜ், ஆனந்தராஜ், முத்துராஜ், ரகுனாத், சுகுமாரன், சஞ்சீவன், லசந்தன், பிரதீப், பிரகாஷ், திருமதி தாட்ஷாயினி-கோகுலவரதன், திருமதி வானதி-கணேந்திரன், திருமதி தாரிணி-பாலச்சந்திரன், செல்வி கல்யாணி.பழனிவேல் ஆகியோரின் மாமனாரும்,
தினேஸ், ஜதீஸ், திருமதி சிந்துஜா-ரவிசந்திரன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 14.08.2020 வெள்ளிக்கிழமை பி.ப 1:30 மணிக்கு South Chapel, Rookwood மயானத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாரு பனிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
திருமதி ஆனந்தரூபி நக்கீரன் (அவுஸ்திரேலியா)- (612) 9643 1572, (614) 2381 7210
தனபாலசிங்கம்-ராஜ்குமார் (கனடா)- (416) 283 2512
தனபாலசிங்கம்-இரத்தினவடிவேல் (லண்டன்)- (44) 7727 935 063