வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, வல்வெட்டித்துறையை வதிவிடங்களாகக் கொண்டிருந்தவருமான திரு. தர்மமச்சந்திரன் செல்வசந்திரன் அவர்கள் 06.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2021 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்
திரு. தர்மச்சந்திரன் செல்வச்சந்திரன்
தோற்றம்: 18.10.1950 மறைவு: 06.09.2021
(ஓய்வுபெற்ற பரிசோதனைக கூட தொழில்நுட்பவியலாளர், வாழைச்சேனை காகித ஆலை)
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, வல்வெட்டித்துறையை வதிவிடங்களாகக் கொண்டிருந்தவருமான திரு. தர்மமச்சந்திரன் செல்வசந்திரன் அவர்கள் 06.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. (Dr)செல்வச்சந்திரன், தங்கமணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவரான திரு. அருளம்பலம் சிவராஜ், மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
குணவதியின் ஆருயிர் கணவரும்
அருள்சந்திரன், ஜெயச்சந்திரன், காலஞ்சென்ற செல்வமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லஷ்மி குமரேசர், ஞானம்பிகை சரவணப்பெருமாள், விஜயகுமரகுரு, சாந்தி அருள்சந்திரன், ராதா ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமரேசர், சரவணப்பெருமாள் ஆகியோரின் சகலனுமாவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வரும் 13-09-2021 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 13.00 மணிக்கு நல்லூர் கோம்பயன் மணல் மின் மயானத்தில் இடம்பெறவுள்ளது.