யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினராஜா குணாளன் அவர்கள் 14-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2014 (வியாழக்கிழமை)
திரு விஜயரத்தினராஜா குணாளன்
மறைவு - 14.10.2014
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினராஜா குணாளன் அவர்கள் 14-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
விஜயரத்தினராஜா (விஜயன் மாஸ்டர்) வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சோதிநாராயணசாமி(பரஞ்சோதி), பார்வதிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூபிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரூபன், பூஜா, பாண்டியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளன், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரவிந்தன், சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஷ், நிதீஸ், ஜஸ்வின்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக திங்கட்கிழமை 20/10/2014, காலை 09:00 மணி தொடக்கம் பிற்பகல் 01:00 மணி வரை Bernardo Funeral Home Ltd, 855 Albion Rd, Etobicoke, ON M9V 1A3, Canada எனும் இடத்தில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் அன்றையதினம் பிற்பகல் 01:00 மணி தொடக்கம் பிற்பகல் 02:00 மணி வரை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து 1567 Royal York Rd Etobicoke, ON M9P 3C4, Canada எனும் முகவரியில் தகனக் கிரியைகள் நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.