வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இராசலெட்சுமி முத்துக்குமாரசாமி அவர்கள் 28.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2014 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - இராசலெட்சுமி முத்துக்குமாரசாமி
அன்னையின் மடியில் 03.03.1934 ஆண்டவன் அடியில் 28.12.2014
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இராசலெட்சுமி முத்துக்குமாரசாமி அவர்கள் 28.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராசதுரை முத்துக்குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான வடிவேலு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், செல்லப்பாக்கியம் அவர்களின் அன்புச்சகோதரியும் ஆவார்.
அன்னார் அனுராதா, அனுசூயா, குமரேந்திரன், குகேந்திரன், குணேந்திரன், கீதா, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத்தாயாரும். வத்சலன், விமலநாதன், ஜெயந்தி, பானு, தவச்சந்திரன், சுரேந்தினி, உஷா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.