வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தமிழ்நாடு திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு செல்வராஜா அவர்கள் 12/02/2013 அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2013 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தமிழ்நாடு திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய கச்சேரி இலிகிதர் குழந்தைவேலு செல்வராஜா அவர்கள் 12/02/2013 அன்று திருச்சியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற குழந்தைவேலு சிவஞானவதி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தருமரெத்தினம் (தங்கவேலாயுதம்) இராசரெத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும், அம்பிகாரெத்தினத்தின் (கட்டியக்கா) அன்புக்கணவரும், சண்முகராஜா (வெள்ளை), அமிர்தராஜா (துரை), லோகேஸ்வரராஜா (பவா), அமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சித்திரா, வானதி, சுஜாதா, பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனும், வெனுஜா, வினோஜன், டிலீபன், மித்திரன், மிதுலா, ஜீவகன், நிகில் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னார் காலஞ்சென்ற வேலாயுதன், மற்றும் ஞானவேல், கமலாவதி, நவரெத்தினசோதி, இந்திராதேவி, பாலகுமாரன், முத்துரெத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுகிழமை 17/02/2013அன்று காலை10.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் திருச்சி ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.