87 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி யாழ்பாணத்தின் பல பகுதிகளில் இந்தியாவின் விமானப்படை விமானங்களால் உணவுப் பொட்டலங்கள் வானத்திலிருந்து போடப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு 'ஒபரேஷன் பூமாலை' (Operation Poomalai, Pūmālai, lit. "Flower Garland") என சங்கேதப் பெயரிடப்பட்டிருந்தது. இது 'Eagle Mission 4' எனவும் அழைக்கப்பட்ட்டது.
இந்திய மிராஜ் போர் விமானங்கள் பாதுகாப்பளிக்க, An-32 விமானங்கள் பரசூட்கள் மூலமாக உணவுப் பொட்டலங்களை போட்டன.
இந்த நடவடிக்கை, 1987 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இலங்கை இராணுவத்தினாரால் மேற்கொள்ளப்பட்டிருந்த 'Operation Libration' என்னும் பெயரில், யாழ் வடமராட்சியின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
அப்போது விடுதைலைப் புலிகளுக்கு எதிராக இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக யாழ்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தடுக்கப்பட்டதாயும் இதனையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாயும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் வானிலிருந்து பொருட்கள் போடப்படுவதற்கு 2 நாட்கள் முன்னர் கப்டன் குப்தா தலைமையிலான சிறிய இந்திய கடற்படை கலங்கள் இதே நோக்கில் பாக்கு நீரிணை வழி பயணித்தபோது இலங்கை கடற்படையினரால் வழிமறைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி மாலை இந்திய வான்படையின் ஐந்து An-32s விமானங்கள், ஐந்து Mirage 2000 விமானங்கள் பாதுகாப்பளிக்க இலங்கை வான்பரப்புக்குள் புகுந்து அத்தியாவசியப் பொருட்களை போட்டுச்சென்றன.
இந்த நடவடிக்கையின் போது இந்திய மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் 35 பேர் உடனிருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கீழே படத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான An-32s விமானம் ஒன்று பெங்களூரில் விமானப் படை விமான நிலையத்திலிருந்து Operation Poomalai க்கு புறப்படும் காட்சி. (Photo - Wikipedia)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.