தற்பொழுது பனை விதைகள் விழும் காலம். பனை விதைகளைச் சேகரித்து தரிசு நிலங்களில் வீசி எரிந்து விட்டால் அவை மழை பெய்யும் போது தாமாகவே தழைக்கும். எந்த வித பராமரிப்பும் தேவையில்லை. ஆடு மாடு போன்ற கால் நடைகள் கடித்தாலும் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படாது.
பனை மரங்களின் வேர்கள் சுமார் 50 அடி ஆழம் வரை பூமிக்குள் செல்லும். இதனால் எவ்வளவு வறட்சியையும் பனை மரங்கள் தாங்க வல்லவை. அத்துடன் மழை காலங்களில் இவற்றின் வேர்கள் மழை நீரை 50 அடி ஆழத்திற்கு பூமியின் நிலத்தடிக்குள் கொண்டு செல்லும் குழாய்கள் போன்று செயற்படும். இதனால் நிலத்தை நீர்மட்டம் கணிசமாக உயரும்.
மேலும பனை மரங்கள் மண் அரிப்பை அறவே தடுக்கும். (மலை பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் செல்பவர்கள் பனை விதைகளை பைகளில் எடுத்துச் சென்று வீசி விட்டால் கூட இவை தழைக்கும் வல்லமை உடையவை. இதை இறை வழிபாட்டின் ஒரு முறை என்று கூடச் சொல்லலாம்)
பனை மரங்களின் நன்மைகள் ஏராளம். பனை மரங்கள் ஒரு இடத்தில் அழியத் தொடங்குகின்றது என்றால் அந்த இடம் (தண்ணீரைப் பொறுத்தவரை) அழியத் தொடங்குகின்றது என்று அர்த்தம்.
(நன்றி – சமூக வலைத்தளம் Whats Up, தமிழகத்திலிருந்து வெளி வந்த கட்டுரை)
யாழ்பாணத்தின் அடையாளம் பனை மரங்கள் ஆகும். கடந்த வருடங்களில் யாழில் பனை மரங்களின் அழிப்பிற்கும் – நிலத்தடி நீர் வீழ்ச்சிக்கும் ஒரு தொடர்பு உள்ளதைக் காட்டுகின்றது மேற்குறிப்பிட்ட சிறு கட்டுரை
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.