நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளது.
இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் விபரங்கள் தற்பொழுது இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் பயனாளிகளின் பெயர் விபரங்கள் கிராம அலுவலர் அலுவலகத்திலும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
எனவே தங்கள் பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளி ஒருவர் பொருத்தமற்றவர் என தாங்கள் கருதினால் அவ் பயனாளி பற்றிய விபரங்களை எமக்கு தயவு செய்து அறியத்தாருங்கள்.
நாடு எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் மிகவும் பாதிப்பு நிலையினை எதிர் கொண்டுள்ள மக்களிற்கு உதவித் தொகை வழங்குவதற்கே இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே அரசாங்கத்தின் நிதியானது தவறான ஒரு நபருக்கு சென்றடைவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
தவறான தகவல்களை வழங்கி அரச உதவியினை பெற்றுக் கொள்ள எத்தனிப்பது மிகவும் குற்றமான செயல் என்பதால்
பொது மக்கள் மிகவும் சமூகப் பொறுப்புடன் நடந்து தங்கள் பிரிவில் பெருத்தமற்ற நபர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவ் பயனாளி பற்றிய விபரங்களை எமக்கு அறியத்தருமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தாங்கள் வழங்கும் தகவல்கள், அரச நிதியினை வீண் விரயமாக பயன்படுத்துவதை தடுப்பதற்கும் மோசடிகளை தடுப்பதற்கும் எமக்கு பெரும் உதவியாக இருக்கும்.
அத்துடன் தகவல் வழங்கும் நபர்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படமாட்டாது என்பதுடன் தாங்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில்,
குறிப்பிட்ட நபர் உண்மையில் அரச நிதி உதவியினைப் பெற்றுக் கொள்ள பொருத்தமான நபரா என்பதை பல தடவைகள் உறுதிப்படுத்திக் கொள்ள எமக்கு உதவியாக அமையும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
அரச உதவிகள் சரியான நபர்களுக்கு சென்று சேர பொது மக்களின் ஒத்துழைப்பினை நாம் மிக உயர்வாக வேண்டி நிற்கின்றோம்.
தகவல்கள் அனுப்பி வைக்கும் முறை.
கிராமஅலுவலர்
J/393 பொலிகண்டி மேற்கு.
பொலிகண்டி.
வல்வெட்டித்துறை என்ற தபால் முகவரிக்கு
அல்லது
கிராமஉத்தியோகத்தர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு பெட்டியினுள் தங்கள் முறைப்பாடுகளை போடமுடியும்.
குறிப்பு - தகவல் வழங்குபவர் தனது பெயரை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயமில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.