சில கட்டுப்பாடுகள் மற்றும் ஆச்சரங்களுடன் மகோற்சவத்தின் முதல் நாளன்று தீர்த்தம் குடித்தல் எனும் நிகழ்வுடன் ஆரம்பமாகும் பூக்காரர் பணி மிகவும் பரந்துபட்டது. பூப்பறித்தல் (இதற்காக இவர்கள் முன்னர் முல்லைத்தீவு வரை செல்வது குறிப்பிடத்தக்கது), பூக்களால் சுவாமியை அலங்கரித்தல், மடப்பள்ளிக்குரிய சில உதவிகள் , சுவாமியின் வாகனங்களை தயார் செய்தல், பகதர்களுக்குரிய சில தேவைகளைப் பூர்த்தி செய்தல் என மிக நீளும் தொண்டுகளை இவர்கள் மகோற்சவ காலம் முழுதும் செய்வது குறிப்பிடத்தக்கது.
சுமார் 5 வயது முதல் 80 வயது வரையான சுமார் 100 வரையானோர், பரம்பரையாக இப் பணியைச் செய்து வருகின்றார்கள்.
இதில் அதிகமானவர்கள் தொண்டைமானாறு பிரதேசத்தையும், குறிப்பிடக் கூடியவர்கள் வல்வெட்டித்துறைப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பூக்காரர்களில் சிலர்
பூக்காரர் அறை - பூங்காவான மண்டபத்தின் ஒரு பக்கத்தில் உள்ளது
பூக்காரர்களின் கை வண்ணங்களில் ஒன்று - செடி வேலைப் பாடுகள்