வன்னியில் முல்லைதீவில் அமைக்கபட்டுள்ள 'War Museum', மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் தங்குமிடம் எனக் கருதப்படும் பாதுகாப்பான மறைவிடம், மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகியவற்றைப் பார்ப்பதற்கு தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டதையடுத்து குறிப்பிடக்கூடிய மக்கள், அதிலும் குறிப்பாக தென்னிலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்கள், ஒவ்வொரு நாளும் அப் பிரதேசங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.
மேற்குறிப்பிடப்பட்ட 'அனுமதிக்கப்பட்ட பகுதிகளில்' காட்சியாக்கப்பட்ட படங்கள், விவரணங்களுடன் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
படங்களுடன் கொடுக்கப்பட்ட விவரணங்களானது, சம்பந்தப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற அறிவிப்புப் பதாதைகளிலிருந்தும், மற்றும் அங்கு விளக்கமளிக்கும் பாதுகாப்பு உத்தியோகதர்களிடமிருந்தும் பெறப்பட்ட தகவல்கள் ஆகும்.
WAR MUSEUM, Stranded Vessel & 'Mulli Vaaikkaal' of Mullaitivu Coast