உடுப்பிட்டி இளைஞர்களால் 24.01.2013 அன்று 80 பட்டங்கள் ஒன்றுடன் ஒன்று வரிசையாக தொடுத்து ஏற்றப்பட்டது. இப்பட்டங்கள் அனைத்தும் ஒரே அளவான அகல உயரத்தைக் கொண்டது. சிறப்பம்சமாக பச்சை மஞ்சள் நிறங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இளைஞர்களினால் இந்த 80 பட்டங்களுடன் சேர்த்து மேலதிகமாக இன்னும் 20 பட்டங்கள் ஏற்றப்படவுள்ளது. வெளியிடங்களிருந்து இந்த பட்டங்களை பார்ப்பதற்காக பார்வையாளர்கள் வருகின்றார்கள்.
ஆரம்பகாலத்தில் வல்வெட்டித்துறையில் இவ்வாறான பட்டங்கள் ஒன்றுடனொன்று தொடுத்து விடப்பட்டு ஏற்றப்பட்டு வந்தது. தற்பொழுது அண்மைக்காலங்களாக வல்வெட்டித்துறையை அண்டிய பகுதிகளில் மிக உயரமான பட்டங்களும், அதிகளவான பட்டங்களும் தொடுத்து ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.