வல்வை சிதம்பராக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் - 2013
Posted Date: 10/02/2013
வல்வை சிதம்பராக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் சனிக்கிழமை (09.02.2013) அன்று பி. ப 1.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு .கி. இராஜதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
இவ் இல்ல மெய்வன்மைப் போட்டிக்குப் பிரதம விருந்தினராக கலாநிதி. சபா. இராஜேந்திரன் (இளைப்பாறிய பேராசிரியர்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் .
இவ் விளையாட்டுப்போட்டியில் ஆண் பெண்களுக்கான அணிநடை, ஓட்டம், தடைஓட்டம், சிறுவர்கள் விளையாட்டு, அஞ்சலோட்டம் போன்ற பல போட்டிகள் மிகவும் சிறப்பாக நடை பெற்றன. மாணவர்களின் இசையும்,அசைவும் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் பாடசாலையின் பழைய மாணவர்களின் விளையாட்டும் நடைபெற்றது.
ஏராளமான பார்வையாளர்களும் இவ் விளையாட்டுப்போட்டியை கண்டுகளித்தனர் .