வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் - 2013
Posted Date: 20/02/2013
வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் சனிக்கிழமை 16.02.2013 அன்று பி. ப 1.30 மணிக்கு சிதம்பரா கல்லூரி மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு ஆ. சிவநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ் இல்ல மெய்வன்மைப் போட்டிக்குப் பிரதம விருந்தினராக திரு அழகேஸ்வரர்சாமி ஸ்ரீகரன் (பிரதி கல்விப்பணிப்பாளார், முகாமைத்துவம் வலய கல்வி அலுவலகம், வடமராட்சி ) அவர்களும், சிறப்பு விருந்தினர் திரு சதானந்தம் சர்வானந்தன் (முகாமையாளர் மக்கள் வங்கி வல்வெட்டித்துறை) அவர்களும், பரிசில்கள் வழங்கி கெளரவிப்பவர் திருமதி லோகேஸ்வரி ஸ்ரீகரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இவ் விளையாட்டுப்போட்டியில் ஆண் பெண்களுக்கான அணிநடை, ஓட்டம், தடைஓட்டம், சிறுவர்கள் விளையாட்டு, அஞ்சலோட்டம் போன்ற பல போட்டிகள் மிகவும் சிறப்பாக நடை பெற்றன. மேல் பிரிவு மாணவ, மாணவிகளினதும் , கீழ் பிரிவு மாணவர்னதும், இசையும்,அசைவும் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் பழைய மாணவர்களின் விளையாட்டும் நடைபெற்றது.
மைதானத்தை சுற்றி ஏராளமான பார்வையாளர்களும் இவ் விளையாட்டுப்போட்டியை கண்டுகளித்தனர் .