வல்வை சிவன் ஆலயத்தின் தேர் வெள்ளோட்ட திருவிழா 2013
Posted Date: 19/03/2013
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர்கள் வெள்ளோட்டம் 2013.03.19 அன்று விடப்பட்டது. இதில் கட்டுத்தேர் அம்பாளுக்கும், சித்திரத்தேர் பிள்ளையார்மற்றும் முருகனுக்குமாக செய்யப்பட்டுள்ளது.
தேரின் மேலுள்ள கலசத்திற்கு பூசை மற்றும் அபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, உள்வீதி வலம் வந்து, அதனைத் தொடர்ந்து வெளிவீதியில் உள்ள தேரின் முன் வைத்து அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வடிவமைத்த ஆச்சாரியர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களை தேரில் இருத்தி பக்தர்களால் தேர்கள் இழுக்கப்பட்டன.