வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 11.04.2013
Posted Date: 11/04/2013
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் 11.04.13 அன்று காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பதினைந்து நாட்கள் நடைபெறவுள்ள இம்மகோற்சவத்தில், தேர் திருவிழா புதன்கிழமை (24.04.2013) அன்றும், அதனைத் தொடர்ந்து தீர்த்தத் திருவிழா வியாழக்கிழமை (25.04.2013) அன்றும் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலானது, வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து மேற்காக சுமார் 800 m தொலைவில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில், வல்வெட்டித்துறை வல்வை வாலாம்பிகை வைத்தீஸ்வரர் (வல்வெட்டித்துறை சிவன் கோவில்) ஆலயத்திற்கு அருகாமையில் அமையப் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.