வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 10 ம் நாள் பகல் இரவுத் திருவிழா - 20.04.2013
Posted Date: 20/04/2013
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 10 ம் நாளான 20.04.2013 அன்று பகல் 10 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவில் முத்துமாரியம்மன் பூந்தொட்டி வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 10 ம் நாளான 20.04.2013 அன்று இரவு 7 மணிக்கு நாதஸ்வர கச்சேரியை தொடர்ந்து, இரவு 8மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இத் திருவிழாவில் அம்மன்,முருகன் மற்றும் பிள்ளையார் தண்டிகை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.