ஆரம்பித்திருக்கும் கோடை காலத்தைத் தொடர்ந்து, வல்லை சம வெளிப் பகுதியில் ஆயிரக்காணக்கான வெளிநாட்டுப் பறவைகள் ஒன்று கூடுகின்றன. இக் கண்கொள்ளாக் காட்சியை யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியூடாக, வல்லை வெளியால் செல்லும் பயணிகள் பார்வையிட்டுச் செல்லுகின்றனர்.
வெளிநாட்டுப் பறவைகள் வருடந்தோறும் இக்காலப்பகுதியில் இங்கு வருகை தருவது வழமை. வல்லை சம வெளிப் பகுதியானது நிலம் மற்றும் நீரினை கொண்ட பிரதேசம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது வடமராட்ச்சியை வலிகாமத்துடன் பிரிக்கும் ஒரு பிரதேசமாகும்.