கட்டி முடிக்கப்பட்டு வரும் தொண்டைமனாற்றுப் புதிய பாலம் - New ‘Thondaimanaru Bridge’ is under construction - 2013
Posted Date: 20/05/2013
படங்களில் கீழே காணப்படுபவை புதிதாக கட்டப்பட்டு முடியும் தருவாயிலுள்ள தொண்டைமனாற்றுப் பாலம். இப்பாலம் யாழ்பாணத்தின் B75 பாதையான யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது. இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கின்றது.
கடந்த கால உள்நாட்டுப்போரின் போது மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப்பெற்ற இந்தப்பாலம் 1985 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் எதிபாராத வகையில் குண்டு வைத்து சேதமாக்கப்பட்டது. சேதமாக்கப்பட்ட பகுதிகள் தற்காலிகமாகக் சீர்செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை தொண்டைமனாற்றிலிருந்து சுமார் 4 KM தொலைவில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இச் செய்தியை ஆங்கிலத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.