கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி -2013
Posted Date: 02/06/2013
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் 02.06.2013 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
பி. ப 02.30 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் (தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக செல்வி இராட்சியலட்சுமி சுப்பிரமணிக்குருக்கள் (அதிபர், யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.சி. தவனேஸ்வரன் ( கிராம உத்தியோகத்தர் பொலிகண்டி மேற்கு J / 393), மற்றும் செல்வி அமிர்தராணி இரத்தினவடிவேல் ( உள்ளுராட்சி ய்தவியாளர், வலி கிழக்கு பிரதேச சபை புத்தூர்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
இப்பாலர் பாடசாலையில் வல்வெட்டித்துறை மற்றும் இதனைச்சூழவுள்ள , பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, பொலிகண்டி தெற்கு, வல்வெட்டி, உடுப்பிட்டி, கெருடாவில், மயிலியதனை, மற்றும் தொண்டைமானாறு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பாலகர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இடவசதி இன்மையால் வகுப்புக்கள் உள்ளேயும், வெளியேயும் நடைபெற்று வருகின்றது. ஆகையால் 70* 25 அடிகள் அகல நீளத்தில் ஒரு இரு மாடிக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு நிர்வாகத்தினர் தீர்மானித்து,இதற்கான நிதியை வல்வை பொதுமக்களிடமும், வல்வை சார் சர்வதேச பொது அமைப்புக்களிடமும், புலம் பெயர்ந்து வாழும் வல்வை மக்களிடமும் நிர்வாகத்தினர் எதிர்பார்த்து சில நாட்களின் முன்னர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தமை இங்கு குறிபிடத்தக்கது
நிர்வாகத்தினரின் அறிக்கையின் படி குறிப்பிட்ட கட்டிடம் கட்டுவதற்கு சுமார் 15 மில்லியன் இலங்கை ரூபாக்கள் (USD$1,20,000/-) தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுகின்றது.
நிர்வாகத்தினரின் சம்பந்தபட்ட அறிக்கை எமது தளத்தின் அறிவித்தல் பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது
தற்போதைய இப்பாலர் பாடசாலை, வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து, கிழக்காக சுமார் 900m தொலைவில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில், நெடியகாட்டு பிள்ளையார் ஆலய சுற்று வளாகத்தில் அமைந்துள்ளது.
இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் நிகழ்வுகளின் முழுத் தொகுப்பினை கீழேயுள்ள படங்களில் காணலாம்