வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் வியாழக்கிழமை (06.06.2013) அன்று காலை 0930 மணியளவில், கண்காட்சி நடைபெற்றது.
விக்னேஸ்வரா பாலர் பாடசாலை தலைவர் திரு லெ. கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக திரு சி. தில்லைநாதன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், வடமராட்சி) கலந்து சிறப்பிந்திருந்தார்.
இக்கண்காட்சியில் பாலகர்களின் பல்வேறு விதமான ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை காண்பதற்கு சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்களும் வருகை தந்திருந்தனர்.
மேற்குறிப்பிட்ட பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத் தொகுதி சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை உதய சூரியன் கடற்கரை வீதியில் வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்கு திசையில் சுமார் 350m தொலைவில் அமைந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறார்களின் கைவினை ஆக்கங்களைக் கீழே உள்ள படங்களில் காணலாம்.