சுட்டிபுரம் அம்மன் ஆலயத்தில் தீர்த்தத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது - 2013
Posted Date: 09/06/2013
யாழ்ப்பாணத்தின் தென்மாராட்சியிலுள்ள மிகவும் பிரசித்தமானதும், புராதனமுமான சுட்டிபுர அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான 09.06.2013, அன்று தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த பன்னிரண்டு தினங்களாக நடைபெற்று வந்த, இந்த மகோற்சவத்தின் இறுதி நாளான 09.06.2013 அன்று தீர்த்த மகோற்சவம் சுமார் 10.00 மணியளவில் ஆரம்பித்து பிற்பகல் 12.30 மணிவரை தும்புருவி தீர்த்தக்குளத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 10.06.2013 அன்று பூங்காவனமும், 11.06.2013 அன்று சாந்தி மடையும் நடைபெறவுள்ளது.
தும்புருவி குளத்தில் மலரும் தாமரை பூக்கள் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலுள்ள இந்து ஆலயங்களில், மகோற்சவ காலங்களில் பூசைக்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சுட்டிபுர அம்மன் ஆலயம் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில், கொடிகாமத்திலிருந்து சுமார் 3km தொலைவில் வரணி பிரதேசத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.