வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் நேற்று மாலை பிட்டுக்கு மண் சுமத்தல் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மூல நன்னாளில் இந்நிகழ்வு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
இவ் பிட்டுக்கு மண் சுமத்தல் தொடர்பான புராணக்கதையில் வைகையாறு பெருக்கெடுத்த பொழுது, பாண்டிய மன்னனின் வேண்டுகோளான அணை கட்டுவதற்காக சிவபிரான் செம்மணச் செல்வி அம்மையாருக்கு உதவவந்ததாகவும், தொழிலாளியாக வந்த சிவபிரான் பிட்டுக்காக மண் சுமந்ததாகவும், அப்பொழுது தொழிலாளியாக வந்த சிவபிரானின் வேலையில் குறைகண்ட பாண்டிய மன்னன், அவர் மேல் பிரம்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
வல்வை சிவன் கோயிலில்
அதையொத்ததாக பாவனை செய்யும் பொருட்டு சிவன் கோவிலில் வாசலில் அணை கட்டுவதுக்கு மண் சுமப்பது போன்றும், பிரம்படி வாங்குவது போன்றும், பிட்டு உண்பது போல அடியார்களுக்கு வழங்கப்பட்டும் பின் கோவிலின் வடக்கு இரண்டாம் வீதியில் அமைந்துள்ள குளத்தில் மண் சுமந்து இடுவது போலவும் காட்டப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.