AFC (23 வயதுக்கு உட்பட்ட) கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை 23 வயதுக்கு உட்பட்டோர் அணி சார்பாக விளையாடுவதற்கான வீரர்கள் தெரிவு செய்யும் நிகழ்ச்சி திட்டத்தினை மாகாண ரீதியாக நடாத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் வடமராட்சி,பருத்தித்துறை லீக்கிகளின் வீரர்களிற்கான தெரிவு கடந்த 2 நாட்களாக இமையாணன் மத்திய மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட அணியின் தலமை பயிற்றுனர் Dudley Steinwell, துணை பயிற்றுனர் ராஜாமணி தேவசகாயம், கோல்காப்பாளர் பயிற்றுனர் மஹிந்த கலதார (Mahinda galadara), மென் இழை நிபுணர் சான்சு சில்வா (Sansu silva) ஆகியோர் தெரிவுகளை மேற்கொண்டதுடன் .. 50 ம் மேற்பட்ட இளம் வீரர்கள் ஆர்வத்துடன் தெரிவில் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.
AFC கிண்ணம் பற்றி
AFC கிண்ணம் என்பது Asian Football Confederation (AFC) இனால் நடாத்தப்படும் கண்டங்கள் அடிப்படையில் உலகின் இரண்டாவது பழமையான (Second oldest continental football championship in the world) உதைபந்தாட்டப் போட்டி ஆகும். இந்த சுற்றுப் போட்டியில் கிண்ணத்தை தனதாக்கும் ஆசிய அணியானது FIFA Confederations Cup ற்கு தானாகவே தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.