யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை கடத்திவந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது இன்றைய தினம் அதிகாலை பருத்தித்துறை கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை செய்தபோது அப் படகில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட கஞ்சா
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த கஞ்சா மற்றும் அதனை கடத்தி வந்த பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியை சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து 50 கிலோ கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டிருந்தது.
கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சாவின் மொத்த பெறுமதியானது இலங்கை பெறுமதியில் 87இலட்சத்து 50ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.