வல்வை நலன்புரிச் சங்கங்களின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கின்றனவா?
பிரசுரிக்கபட்ட திகதி: 26/10/2016 (புதன்கிழமை)
புலம்பெயர் நாடுகளிலும் அதனைத் தொடர்ந்து தாய் மண்ணிலும் நலன்புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களின் முதன் முதலில் ஸ்தாபித்த பெருமை நம்மையே சாரும். அத்துடன் ஒரு ஊருக்கென பல நலன் புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்கள் என்பவற்றையும் நாம் பெற்றிருக்கின்றோம்.
வல்வையின் நிதித் தேவையில் குறிப்பிடக்கூடிய பங்கினையும், வல்வையின் வளர்ச்சியில் வேறும் சில பல செயற்பாடுகளிலும் வல்வை நலன்புரிச் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களின் ஈடுபட்டு வருகின்றன.
இந்த வகையில் வல்வை நலன்புரிச் சங்கங்களின் செயற்பாடுகள், கடந்த காலங்களில் – இதுவரை வல்வையில் மேற்கொண்ட செயற்பாடுகள் எப்படி அமைந்து வருகின்றன என்பதை அளவு கோலிடும் நோக்கில் இந்தக் கருத்துக் கணிப்பை இணைத்துள்ளோம்.
('ஆம்' அல்லது 'இல்லை' என்ற உங்கள் முடிவை இந்த இணையதளப் பக்கத்தின் இடப் பக்க மேல் மூலையில் 'கருத்துக் கணிப்பு' பகுதியில் குறிப்பிடவும்)
வல்வை நலன்புரிச் சங்கங்களின் மற்றும் ஒன்றியங்களின் வயது, நம்பகத் தன்மை, நிதி விடயங்கள், கணக்கு விபரம், உறுதிப்பாடு, வருடாந்த அமர்வுகள் - இதன் போதான முடிவுகள் – இவற்றை செய்து முடித்தல், வல்வைக்கான உதவிகள் (நிதி மற்றும் கட்டுமானங்களுக்கான உதவிகள்) எதிர்காலத்தில் செய்யக் கூடிய உதவிகளுக்கான திட்டங்கள்........ எனும் அடிப்படியில் கண்டறிந்து உங்கள் எண்ணத்தை தெரிவியுங்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Valvai mani (Swiss)
Posted Date: October 22, 2016 at 17:51
முதலில் இந்த கருத்து கணிப்பு முக்கியமான ஒன்று,தற்போதைய கால கட்டத்தில்,இதற்க்கு எனது அபிப்பிராயம் இல்லை என்பதே பதிலாகும், காரணம் Swiss ல் வல்வை ஒன்றியம் (பல ஆண்டுகளுக்கு முன்)ஆரம்பிப்பதற்க்கு உறதுணையாகவும் ,அதில் ஒன்றியத்தின் தலைவர்கள் பதவியை வகித்தவன் என்ற முறையில்,Swiss ல் தற்போது அதன் செயற்பாடு இல்லை என்றே கூறலாம் ,காரணணங்கள் பல அதை இங்கு எழுதி எம் ஊரையும் மக்களையும் ,மற்ற ஊரவர்கள் பழிக்கும் நிலைக்கு ஆளாக்கவிரும்பவில்லை,,,,,,,,,,,,,,,
Ram (London)
Posted Date: October 22, 2016 at 10:58
ஆஸ்திரேலியா நலன்புரிசங்கம் அண்மையில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டது வல்வையின் அபிவிருத்தியில் ஓர் திருப்புமுனை. வல்வை மற்றும் சிதம்பராக்கல்லூரியின் பெயரில் சம்பாதித்த பொதுமக்களின் பணத்தை வட்டிக்கு விடும் முறைமைக்கு முற்று புள்ளி வைத்து சங்கங்களை சட்ட ரீதியாக பதிவு செய்து மக்களின் பணம் வெளிப்படையாக கணக்குகள் சமர்பிக்குமிடத்து மக்கள் சங்கங்களின் பின்னால் அணிதிரள்வர்
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: October 22, 2016 at 10:57
மற்ற நாட்டில் வல்வை நலன் புரிசங்கங்களின் செயல்பாடுகள் குறித்து எனக்கு தெரியாது .கனடாவை பொறுத்தமட்டில் வல்வை நலன்புரி சங்கங்கள் செயல் படுகின்றன .ஊரின் முன்னேற்றத்திற்கோ ,ஊர்மக்களின் முன்னேற்றத்திற்கோ ,அல்லது போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது உதவிகள் செய்யப்படுகின்றதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் .கோவிலுக்காக ஊர்மக்களின் வீடு வீடாக சென்று நீதி சேகரிக்கும் எம்மவர்கள் .வறுமைக்கோட்டின் கீழிருக்கும் எமது ஊர் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவற்கோ ,போரினால் பாதிக்கப்பட்டு யாருடைய உதவியும் கிடைக்காமல் அன்றாட வாழ்கையை ஓட்டுவதற்கே கடினப்படும் தமிழர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு செயல்படுவதில்லை என்பது மிகவும் வேதனையை தருகின்றது ,
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.