வல்வெட்டித்துறைச் சந்தியில் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2017 (திங்கட்கிழமை)
தமிழர் திருநாள் தைப்பொங்கல் அன்று நேற்று முன்தினம், வல்வெட்டித்துறை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் பொங்கல் பானை வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
குறித்த பகுதி வாழை தோரணங்கள் மற்றும் கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் பதாகை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் பசு மற்றும் கன்றுக் குட்டி கொண்டு வரப்பட்டு வழிபாடும் இடம்பெற்றிருந்தது.
கடந்த 6 வருடங்களாக வருடந்தோறும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை கலை இலக்கிய மன்றத்தினால் தைப்பொங்கல் விழா இவ்வாறு தொடர்ச்சியாக கொண்டாப்பட்டுவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.