தொண்டைமானாறு அக்கரையில் கலாச்சார சீரழிவு? பொதுமக்கள் போலீசார் முறுகல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)
அக்கரை தொண்டைமானாறு பகுதியில் உள்ள சுற்றுலா மையத்தை அகற்றுமாறு கோரி பொதுமக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும்பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்ப்பட்டது.
இம்முறுகல் நிலை தொடர்பில் வீடியோ பதிவு செய்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்ததினால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
வலி.கிழக்கு பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட அக்கரை சுற்றுலா கடற்கரையில் தொடர்ந்து கலாச்சார சீரழிவுகள் மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத சில செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு தரப்பினர்களிடத்தில் கோரிக்கை விடுத்த போதும் அத்தரப்பினர்களால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைப் பொறுத்துக் கொள்ளமுடியாத அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் அக்கரை கடற்கரைக்கு செல்லும் வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் வீதியில் தடை ஏற்ப்படுத்தப்பட்டதுடன், கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் திரும்பி அனுப்பப்பட்டனர்.
பிரதேச சபைக்குரிய வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் வீதியில் உள்ள தடைகளை அகற்றுவதற்கு பிரதேச சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அச்சுவேலி பொலிஸார் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அக்கரைப் பகுதிக்கு சென்றனர்.
அங்கு வந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற எடுத்த நடவடிக்கையினாலேயே இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டிருந்தது.
மேற்கண்டவாறு நேற்றைய தினக்குரல் பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.