அலைவகை குழப்பம் காரணமாக வல்வை உட்பட வடமராட்சியிலும் தொடர்ந்து மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/01/2017 (புதன்கிழமை)
இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள அலைவகை குழப்பம் (Wave type disturbance) காரணமாக தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் தற்பொழுது மழை பெய்து வருகின்றது. யாழ் வடமராட்சியில் வல்வெட்டித்துறை உட்பட்ட பல இடங்களில் காலை முதல் தற்பொழுது மாலை 7 மணி வரை ஓரளவு மழை தொடர்ச்சியாகவன்றி பெய்துவருகின்றது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் வல்வையின் பெரும்பாலான வீதிகளில் மழை நீர் தேங்கி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடிப் பகுதியில் இன்று மாலை 7 மணிவரை சுமார் 8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்றிலிருந்து மழையுடன் கூடிய காலநிலைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையான மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology) கடந்த 3 தினங்கள் முன்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கீழே படத்தில் மழை காரணமாக வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் வீதியில் வெள்ளம் தேங்கியுள்ளதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.