திருட்டுக்கோழி பிடிக்க முற்பட்டவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பியோட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2017 (சனிக்கிழமை)
தொண்டைமானாறு வல்வை வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்து கோழிகளை பிடிக்க முற்பட்டவர் ஊர் பொதுமக்களைக் கண்டதும் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு சென்றுள்ளார்.
வீதியில் கைவிட்டிருந்த மோட்டார் சைக்கிள் பொதுமக்களால் மீட்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரவு வேளையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணொருவர் வளர்த்துவரும் கோழிகளைப் பிடிக்க ஒருவர் முற்பட்டுள்ளார்.
இதன் போது விழித்துக் கொன்ட அப்பகுதி இளைஞர்கள் குறித்த நபர பிடிக்க முற்ப்பட்ட போது இளைஞர்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளையும் கைவிட்டு தப்பி சென்றுள்ளார். இது தொடர்பில் இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த வல்வெட்டித்துறை போலீசாருக்கு இளைஞர் தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோட்டார் சைக்கிளை மீட்டு பொலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலீஸ் உத்தியோகத்தவர் ஒருவர் பயன்படுத்தும் பொதுமகன் ஒருவருடையது என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நெல்லியடி பொலீஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் காங்கேசன்துறை உதவி பொலீஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேர்கண்ட செய்தி நேற்றைய தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.