2022 ஆம் ஆண்டிற்கான சூரிய கிரகணத்தை யாழ்பாணத்தில் நாளைய தினம் மிகத் தெளிவாக காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை மாலை மணியளவில் சூரிய கிரகணத்தைப் பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் முழுமையாக 22 நிமிடங்களுக்குத் தெரியும் எனவும் கொழும்பில் மாலை 5.43 மணி முதல் 5.52 மணி வரை மட்டுமே அவதானிக்க முடியும்.
சூரிய கிரகணத்தின் அதிகபட்ச கிரகணம் மாலை 5.49 மணிக்கு நிகழும், அதன் முடிவு மாலை 6.20 க்கும் நிகழும்.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை, பகுதி கிரகணம் மாலை 5.27 மணிக்குத் தொடங்குகிறது, அதிகபட்ச கிரகணம் மாலை 5.46 மணிக்கு 8.8% சூரியன் சந்திரனால் மூடப்பட்டிருக்கும். மாலை 6.20 மணிக்கு கிரகணம் நிறைவடைந்தாலும், மாலை 5.49 மணிக்கு சூரியன் மறையும் வரை மட்டுமே இந்த கிரகணத்தை 22 நிமிடங்களுக்கு யாழ்ப்பாணத்தில் காண முடியும்.
இதைத் தவிர ஜ்ரோப்பா வட ஆபிரிக்கா ஆசியாவின் மேற்கு பாகம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சூரிய கிரகணம் முழுமையாக தென்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.