கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி தென் கொரியாவில் விபத்துக்குள்ளான தென்கொரிய கப்பலின் கப்டன் Lee Joon seok இற்கு 36 வருட சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தபோதும், கப்டன் லீ ஜோன், மாலுமிகள் சட்டத்தை ( "seamen's law") மதிக்காமல் மீறிவிட்டார் என்றும், கப்பலை (Ferry) தன்னிச்சியாக கைவிட்டு பல பயணிகள் இறப்பதற்கும், காயமடைவதற்கும் காரணமாக உள்ளார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டே குறித்த இந்தத் தீர்ப்புக்கு ஆளாகியுள்ளார்.
தென்கொரியாவில் கடந்த 5 மாதங்களாக மிகவும் பரபரப்பாக அவதானிக்கப்பட்டு வந்த வழக்கு இதுவாகும்.
3 நீதிபதிகளால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் கப்டன் லீ ஜோன் அவதானமின்மை (negligence), கைவிடுதல் (abandonment), நடத்தை (conduct)மற்றும் கொலை (Murder) போன்ற பல விடயங்களிற்கு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த விபத்தின் போது கப்பலில் கிடைத்திருந்த பாதுகாப்புச் சாதனங்களான உயிர்காப்பு மிதவைகள் (life rafts), உயிர்காப்பு அங்கிகள் (life vests) மற்றும் அபாய அறிவிப்பைச் செய்யும் உபகரணம் (announcements) போன்றவற்றை பாவித்துபயணிகளை காக்கத் தவறிவிட்டார் என மேலும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
மேலும் இவ்வழக்கில் கப்பலின் தலைமை பொறியியலாளருக்கு (Chief Engineer) 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் ஊழியர்கள் (Crew) 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி 476 பயணிகளுடன் கொரியாவின் துறைமுக நகரான இஞ்சோனிலிருந்து (Incheon) கொரியாவின் உல்லாசபுரி தீவு என அழைக்கப்படும் ஜேஜூ (Jeju) இற்கு பயணித்திருந்த பயணிகள் கப்பலான 'Sewol', இடைவழியில் ஒருபக்கம் சாய்ந்து பகுதியாகக் கவிழ்ந்ததில் பலர் மரணமானார்கள்.
இவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் (Secondary school students, Danwon High School). இதனால் இந்த விடயம் வழமைக்கும் அதிகமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவலாகப்பேசப்பட்டிருந்தது.
தேடும் பணி இன்றுடன் நிறுத்தம்
இது இவ்விதம் இருக்க இதுவரை மேற்கொள்ளப் பட்டு வந்த தேடும் பணி இன்றுடன் முடிவுக்கு வருவதாக தென்கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுவரை 295 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இன்னும் 9 பேரை காணவில்லை என்றும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.