ஆசியாவின் சிறந்த கடற்கரைகள் பட்டியலில் இலங்கை முதலிடம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2026 (வியாழக்கிழமை)
2026ஆம் ஆண்டுக்கான Condé Nast Traveller வாசகர்கள் தெரிவு விருதுகளில், ஆசியாவின் சிறந்த கடற்கரையாக இலங்கையின் அறுகம் பே (Arugam bay) கடற்கரை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
98.84 புள்ளிகளைப் பெற்று அறுகம் பை கடற்கரை முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், பெந்தோட்டை, தங்காலை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைகளும் ஆசியாவின் முதல் 20 சிறந்த கடற்கரைகளில் இடம்பிடித்துள்ளன.
தாய்லாந்தின் ரெய்லே கடற்கரை இரண்டாம் இடத்தையும், மலேசியாவின் கோரல் கடற்கரை அடுத்த இடத்தையும் பெற்றுள்ளன. பிலிப்பைன்ஸின் பொராக்கே கடற்கரையும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஆசியாவின் கடற்கரைச் சுற்றுலாத் துறையில் இலங்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்தத் தரவரிசை அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.