இலங்கையின் 1வது ஒன்றிணைந்த மின்சக்தி நிலையம் இன்று எழுவைதீவில் திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2017 (வெள்ளிக்கிழமை)
எழுவைதீவுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு நடைபெறவுள்ளது. பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
காற்று, சூரியசக்தி மற்றும் டீசலைப் பயன்படுத்தி இங்கு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 60 கிலோவோட்ஸ் மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடியதாக இது அமைந்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகியன இணைந்து இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளன. இதற்கு 187 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின் அலகுக்கு 9 ரூபா 14 சதமே செலவாகிறது. மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இந்தத் தீவில் 787 பேர் மட்டுமே வாழுகின்றனர். இவர்களுக்கு தேவையான மின்சாரம் இது வரை டீசலை பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எழுவைதீவு (Eluvaitivu or Ezhuvaitheevu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். சப்த தீவுகள் என அழைக்கப்படும் தீவுகளில் இதுவும் ஒன்றாகும்.
கீழே படத்தில் எழுவைதீவில் அமைக்கப்பட்டுள்ள மின்சக்தி நிலையத்திற்காக அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.