2050 ஆண்டளவில் இலங்கையின் கடல் மட்டம் 0.2 முதல் 0.6 மீற்றர் வரை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கரையோர சமூகங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடல் மட்ட உயர்வினால் ஏற்படும் இருத்தலியல் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் கடந்த புதன் கிழமை ஐ.நா. பொதுச் சபையில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்துகொண்டுப் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், வரவிருக்கும் நெருக்கடி குறித்து கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் நடவடிக்கை எடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.
“எங்கள் உலகம் ஆபத்தான நீரில் உள்ளது,” என்று குட்டெரஸ் தெரிவித்திருந்தார். “கடந்த 3,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் உலகளாவிய கடல் மட்டம் இப்போது வேகமாக உயர்ந்து வருகிறது.
ஏனெனில் பசுமை இல்ல வாயுக்கள் நமது கிரகத்தை வெப்பமாக்குகின்றன, இது கடல் நீரை விரிவுபடுத்துவதுடன், பனிக்கட்டிகளும் வேகமாக உருகுகின்றன.
“கடல் மட்ட உயர்வு என்பது துயரத்தின் எழுச்சி அலை என்று பொருள்படும்” என அன்டோனியோ குட்டெரஸ் மேம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, IPCC (Inter-governmental Panel on Climate Change) மதிப்பீட்டின்படி, 2050 ஆம் ஆண்டில், உலக கடல் மட்டம் சராசரியாக 15 முதல் 30 சென்டிமீட்டர் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.