பருத்தித்துறையில் கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் குடும்பத்திற்கு இராணுவ அதிகாரி 2 மில்லியன் ரூபா இழப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)
1998 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற லெப்ரினற் தர இராணுவ அதிகாரி ஒருவர், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய 2 மில்லியன் ரூபாவினை விடுதலைப்புலி உறுப்பினர் குடும்பத்திற்கு இழப்பீடாக கடந்த செவ்வாய்க் கிழமை வழங்கியுள்ளார்.
1988 ஆம் ஆண்டு தடுப்புக் காவிலில் இருந்த ரொபேர்ட் வெலிந்தன் என்பவரின் மரணத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டு, கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பு உயர் நீதி மன்றம் (Colombo High Court) குறித்த இராணுவ அதிகாரிக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையையும் 10 வருட தற்காலிக உத்தியோக நிறுத்ததையும் வழங்கியிருந்தது.
குறித்த இராணுவ அதிகாரி, யாழின் பருத்தித்துறையில் இரணவத்தின் தடுப்புக் காவலில் கைகள் கட்டப்பட்ட நிலையிலிருந்து தப்பிக்க முயன்ற விடுதலைப் புலி உறுப்பினரை அஜாக்கிரதையாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதன் பேரில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
குறித்த இழப்பீட்டு பணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கூட்டு எதிர்க் கட்சியின் ஆதரவளர்களால் திரப்பட்டுள்ளது. (PTI)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.