ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் - உலங்கு வானூர்தியில் வந்திருந்த விருந்தினர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2017 (வெள்ளிக்கிழமை)
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது.
இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வு அடிக்கல் நாட்டும் வைபவம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிஜயசேகர பிரதி அமைச்சர் எச்.எம எம்.ஹரீஸ் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் ஆளுநர் றெஜினோல்ட் கூரே மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் M.K சிவாஜிலிங்கம் மற்றும் ஆழிக்குமரன் ஆனந்தன் மனைவி மற்றும் இரு மகன்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு விருந்தினர்கள் உலங்கு வானூர்தி மூலம் வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தை வந்தடைந்து, அங்கிருந்து வாகனங்கள் மூலம் வல்வை ரேவடிக் கடற்கரைப் பகுதியை வந்தடைந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.