இன்று சுவிஸ் வானவில் வண்ணக்கலை விழா - படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2014 (சனிக்கிழமை)
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்படும் சுவிஸ் வானவில் 2014ம் ஆண்டின் கலைவிழா நாளை சனிக்கிழமை (07-06-2014) மாலை 1.00 மணிக்கு 8049 Zurich, Bodenavker 25, GZ Affoltern என்னும் இடத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இவ் சுவிஸ் வானவில் வண்ணக்கலை விழாவில் பல ஆடல், பாடல், நடன, நாடக நிகழ்வுகளுடன் சிறப்பு விவாத அரங்கமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் வானவில் விழாக்களின்போது வண்ண சிறப்பிதழ்களும், இறுவட்டுக்களும் வெளியிடப்பட்டுவருகின்றன. அதன் வரிசையில் இம்முறையும் உடுவை எஸ் தில்லைநடராசா தொகுத்து தயாரித்த சுவிஸ் வானவில் வண்ண சிறப்பிதழ் வெளியிடப்படவுள்ளது. இச்சிறப்பிதழ் கனடா, லண்டன், கொழும்பு ஆகிய இடங்களிலும் வெளியிடப்படவுள்ளது. இவ்விதழிலில் கடந்த 2013 கொழும்பு வானவில் மலரைப் போலவே வண்ணப்படங்கள் மலரின் இரண்டாம் பாகமாக இணைக்கப்பட்டுள்ளது.
இவ் வானவில் கலை விழாவானது 80களின் இறுதியில் நாட்டில் நிலவிய போரால் தாயகத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியும், உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் பெரும் அழிவை சந்தித்திருந்தன. கல்லூரிகளின் தளபாடங்கள், கட்டிடங்கள் அழிவடைந்த நிலையில் தனியார் வீடுகள் வகுப்பறையாக மாறியிருந்தன.
இத்தருணத்தில் 90களின் ஆரம்பத்தில் கனடா விஜயம் செய்த உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ் பல்கலைக்கழக உபவேந்தருமாகிய பேராசிரியர் துரைராஜா கல்லூரிகளை புனரமைத்து மீளக்கட்டியெழுப்பி கல்வி நடவடிக்கைகளையும், ஏனைய செயற்பாடுகளையும் விரிவாக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அதனை கருப்பொருளாக மனதில் கொண்ட கனடா பழைய மாணவ மாணவியர் கலைவிழா ஒன்றினை நடத்தி அதன் மூலம் நிதி திரட்டி கல்லூரிகளை புனரமைப்பது என்றதன் எண்ணமே இவ் வானவில் கலைவிழாவின் ஆரம்பமாகும்.
கனடாவை தொடர்ந்து சுவிஸ், லண்டனிலும் தற்போது வானவில் கலைவிழா நடைபெறுகிறது. கடந்த வருடம் கொழும்பில் வானவில் ஒன்றுகூடல் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
கடந்தகாலங்களில் நடைபெற்ற வானவில் வண்ணகலைவிழாவின் சில பதிவுகள்
க.பொ.த. உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மாணவன் கமலவாசன், குண்டெறிதல் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி.மாணவன் நிமலேந்திரா, தேசியமட்ட குறுநாடகப் போட்டியில் முதலிடம் பெற்ற உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி மைதிலி ராஜதுரை கடந்தமுறை கொழும்பில் நடந்த வானவில் ஒன்றுகூடலில் பாராட்டபட்டபோது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S.Thillanadarajah (Sri Lanka)
Posted Date: June 06, 2014 at 16:03
மிக அழகாவும் அமைப்பாகவும் சுவிஸ் வானவில் -2014 செய்திகளோடு தொடர்பான தகவல்களையும் வெகு நேர்த்தியாக வண்ணப்புகைபடங்களையும் இணைத்துக் கொண்டமைக்கு உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மாணவன் சண்முகன் முருகவேலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பலப்பல .....உடுவை
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.