தலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக வர்த்தமானியில் பெயரிடுவதற்கு கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இதற்கான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன் சந்திர தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதே இதன் நோக்கமாகும். இந்தக் கப்பல் சேவையை இலாபமீட்டும் செயற்றிட்டமாக மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் துறைமுகமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தலைமன்னாரின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.