நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளட் ஆகிய கட்சிகளுக்கு இடையிலேய இந்த சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய வல்வெட்டித்துறை நகரசபையானது ரெலோவிற்கு (தமிழீழ விடுதலை இயக்கம்) வழங்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி ஆகியோர் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக்கொண்டவர்கள் ஆவார்கள்.
கடந்த 1998 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில், சிவாஜிலிங்கத்தின் முயற்சியில் ரெலோ தனித்து போட்டியிட்டு நகரசபையை தனதாக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா. (Canada)
Posted Date: December 10, 2017 at 21:00
எமது பாரம்பரியமான தமிழரசுக் கட்சி அதன்பின்பு வல்வையில் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்பட்டபின்பு 1971ன் பின்பு தமிழர்விடுதலைக் கூட்டணியாகவும் பின்பு தமிழ்த்தேசிய அமைப்பாகவும் இயங்குகின்ற அமைப்பினூடாக, தமிழரசு, ரெலோ, கேட்கும் வேட்பாளர் குளுவினர்க்கு எமது முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
ந.நகுலசிகாமணி, உமா.
கனடா.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.