காங்கேசன்துறையில் அமைந்துள்ள Thalsevana Holiday Resort, நீங்களும் போகலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2014 (வியாழக்கிழமை)
கீழே படங்களில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஒரு பிரயாணிகள் தங்கு விடுதியாகும். 'Thalsevana Holiday Resort' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விடுதி யாழ் காங்கேசன்துறையில், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது.
தலைநகர்களில் அமையப்பெற்ற தங்கு விடுதிகளின் தரத்திற்கு அமைவாக மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதி தற்பொழுது சகல பொது மக்களின் பாவனைக்கும் விடப்பட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இது அமைந்துள்ளதால் 'Pass' அனுமதியுடன் செல்ல வேண்டும். குறித்த 'Pass' அனுமதியான இதை அண்மிக்கும் யாழ்பாணம் - காங்கேசன்துறை வீதியில் வழங்கப்படுகின்றது.
குறித்த தங்கு விடுதியைச் சுற்றிப் பார்ப்பதற்கு 40/- கட்டணமும் அறவிடப்படுகின்றது.
மேலும் படம் (Shooting) எடுப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.