அதிகாலை வேளையில் வீட்டிற்கு உள்நுழைந்து கொள்ளையிட்டவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வயிதிபர் ஒருவர் கொள்ளையர்களின் கத்திக்குத்து இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டிதுறையிலுள்ள வீடொன்றில் உள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த முதியவர் ஒருவரை கத்தியினால் குத்திவிட்டு ஒரு தொகை பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 01.15 மணியளவில் முதிரக்கட்டை ஒழுங்கை நெடியகாடு, வல்வெட்டித்துறையிலுள்ள வேலும்மயிலும் முருகவேல் எனும் 63 வயதான முதியவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வேளையில் கயிற்றைப் பயன்படுத்தி மதிலால் ஏறி உள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் பின்புறமாக உள்ள கதைவைத்திறந்து உள்நுழைந்து அலுமாரியைத் திறந்து கொள்ளையிட்டனர்.
வீட்டிற்கு நுழைந்த நான்கு கொள்ளையர்கள் அலுமாரியைத் திறந்து கொள்ளையிடுவதைக் கண்ணுற்ற குறித்த முதியவர் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்ட போது கொள்ளையர்களின் கத்துக்குத்து இலக்கான நிலையில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையின் ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சிக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த சம்பவத்தில் ஒரு தொகை பணமும், ஒரு சாவிக் கொத்தும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை போலீசார் மோப்பநாய் சகிதம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.